ஊரடங்கில் கோயில் கும்பாபிஷேகம்..! மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, மொத்தமாக 38 பேருக்கு தொற்று, ஒரு கிராமமே கண்காணிப்பில்..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கில் கோயில் கும்பாபிஷேகம்..! மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, மொத்தமாக 38 பேருக்கு தொற்று, ஒரு கிராமமே கண்காணிப்பில்..

வவுனியா - ஓமந்தையில் சுகாதார பாதுகாப்பு விதிகள் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டிருந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதனையடுத்து குறித்த 13 தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஆலயம் மற்றும் 30 வீடுகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகிய நிலையில் 

மேலும் 25 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த கிராமத்தில் சுமார் 100 பேர் வரையிலேயே வசித்து வரும் நிலையில், 38 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 

இதனால் கொவிட் அச்சுறுத்தல் மிக்கதாக குறித்த கிராமம் மாறியுள்ளதால் மக்கள் சுகாதார நடைமுறைகளை பேணி அவதானமாக இருக்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு