முழு கல்வித்துறையும் இருண்ட யுகத்தில்
கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பத்தில் அரசாங்கம் தயக்கம் காட்டுவதன் மூலம், குழந்தைகளின் கல்வியை மழுங்கடிப்பதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்னிற்கும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கையின் முழு கல்வித்துறையும் வரலாற்றில் இருண்ட யுகத்துக்கு முகங்கொடுத்துள்ளது என்றார்.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்துள்ள அவர்,
நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கமும் அதன் தலைவர்களும் நாட்டில் ஏற்பட்டுள்ள கல்வி நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க எவ்வித சாதகமான திட்டத்தையும் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை என்றார்.
இந்த துரதிஷ்டமான கல்வி நெருக்கடியின் தற்போதைய மற்றும் எதிர்கால விளைவுகளின் தீவிரம் மற்றும் பேரழிவை இலங்கையின் ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது அருவருக்கத்தக்க விடயம் என்றார்.