SuperTopAds

ஆலய குருக்கள் உள்ளிட்ட 6 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!

ஆசிரியர் - Admin
ஆலய குருக்கள் உள்ளிட்ட 6 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!

வவுனியா,ஓமந்தையில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி கும்பாபிசேகம் இடம்பெற்ற நிலையில் ஆலய பூசகர் உள்ளிட்ட ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுகாதார அறிவுறுத்தல்களை மீறி குறித்த ஆலயத்தில் திருவிழா இடம்பெறுவதை அறிந்த,சுகாதாரப் பிரிவினர் கும்பாபிக்ஷேகத்தில் கலந்து கொண்டவர்களிடம் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் ஆலய குருக்கள் உள்ளிட்ட 6 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, ஓமந்தை, நொச்சிக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் கும்பாபிசேகம் நடத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினரால் சுகாதாரப் பிரிவினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

எனினும் நாட்டில் தற்போதைய கோவிட் பரவல் நிலையை அடிப்படையாக கொண்டு ஆலய நிர்வாகத்தினர்,உபயகாரர் என 9 பேருக்கு சுகாதாரப் பிரிவினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

ஆனால்,குறித்த ஆலயத்தில் 20 பேருக்கு மேல் நிற்பதாகவும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள் ஆலயத்தில் நின்ற 20 பேரிடமும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில் ஆலய குருக்கள் உட்பட 6 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,தொற்றாளர்களும்,அவர்களுடன் தொடர்புடையவர்களும் சுகாதாரப் பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.