SuperTopAds

ஊரடங்கு மற்றும் சுகாதார வழிகாட்டல்கள் நடைமுறையில் இருக்கும்போது கோவிலில் திருவிழா! பூசகர் உள்ளிட்ட 11 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு மற்றும் சுகாதார வழிகாட்டல்கள் நடைமுறையில் இருக்கும்போது கோவிலில் திருவிழா! பூசகர் உள்ளிட்ட 11 பேருக்கு தொற்று..

ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி கோவிலில் அதிகளவான மக்கள் கூடியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோவிலை முற்றுகையிட்ட சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர், 

கோவிலில் நின்றவர்களுக்கு நடத்திய அன்டிஜன் பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இந்நிலையில் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுவருகின்றனர். 

முதற்கட்ட பரிசோதனையில் கோவில் குருக்கல் உள்ளிட்ட 6 பேருக்கும், 2ம் கட்ட பரிசோதனையில் மேலும் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.