தேர்தலில் காலெடுத்து வைக்கும் இளையதளபதி!! -உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் மக்கள் இயக்கம்-

ஆசிரியர் - Editor II
தேர்தலில் காலெடுத்து வைக்கும் இளையதளபதி!! -உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் மக்கள் இயக்கம்-

மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் களம் இறங்குவதற்கு இளையதளபதி விஜய் ஒப்புதல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், இந்த தேர்தலில் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் களம் காண இளையதளபதி விஜய் ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிகிறது. மக்கள் இயக்கத்தின் கொடி மற்றும் தனது படத்தை பிரசாரத்திற்கு பயன்படுத்தவும் ஒப்புதல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு