நாடு சிவப்பு வலயத்தில் உள்ளபோது ஊரடங்கை நீக்கவேண்டாம்! வைத்திய அதிகாரிகள் சங்கம் அழுத்தம், ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்..
நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ம் திகதிக்கு பின் தளர்த்துவதா? நீடிப்பதா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் இலங்கை விசேட வைத்தியர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை விடுத்து நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என கோரியுள்ளது.
இலங்கை கொரோனா பரவலில் சிவப்பு வலயத்தில் உள்ளதாகவும் இது பச்சை வலயமாக மாறும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று இடம்பெறும் கூட்டத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வயதெல்லை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.