பாடசாலை ஆசிரியர்களுக்கு பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பு! முறைப்பாடு பதிவு செய்யுங்கள்..
இணையவழி கற்பித்தலில் ஈடுபடுபட்டிருக்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கு எவரேனும் ஒருவர் கற்பிக்கவேண்டாம். என அழுத்தம் கொடுப்பாராயின் அது தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யுமாறு பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்தல் விடுத்துள்ளது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு (CID), 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியுமென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அழுத்தங்களை பிரயோகித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று
பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.