அரசியல் கைதிகளை பார்வையிட எம்.பிக்களுக்கு அனுமதி மறுப்பு!

ஆசிரியர் - Editor I
அரசியல் கைதிகளை பார்வையிட எம்.பிக்களுக்கு அனுமதி மறுப்பு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக, இன்று காலை சட்டத்தரணிகளுடன் சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரனுக்கு அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

'கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் அனுமதிக்க முடியாது என்றும் அவ்வாறு அனுமதிப்பதாக இருந்தால் கொழும்பில் இருக்கும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சிடம் அனுமதி பெற்று, தங்களுக்கு அறிவித்தல் கிடைத்தால் மாத்திரமே அனுமதிப்கோம் என, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்' என, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

இதையடுத்து, இராஜாயங்க அமைச்சின் செயலாளாருக்கு தொடர்பை ஏற்படுத்தியும் எந்த பதிலும் இல்லாத நிலையில், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

'தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எங்களிடம் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் சிறையில் உள்ள அவர்களின் நலன்களை பார்ப்பதற்கு சட்டத்தரணி என்ற வகையிலும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் எங்களை ஈடுபடுத்த சொல்லி கேட்டுள்ளார்கள்.

'இதில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் நீதி நியாயம் எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கும். நாங்கள் தொடர்ந்தும் முயற்சிகளை எடுப்போம்' என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு