அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளுடன் பேச்சு..!
அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து தமிழ் அரசில் கைதிகளை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருக்கின்றார்.
தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அச்சுறுத்திய சம்பவத்தை தொடர்ந்து,
கைதிகள் முன்வைத்து வேண்டுகோளுக்கு அமைவாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது கைதிகளின் துன்பங்களை பகிர்ந்துக்கொண்டதாக அமைச்சர் நாமல் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சிறையில் உள்ள கைதிகள் விடுதலையானவுடன், அவர்களின் மறுவாழ்வு மற்றும் சமூகத்தில் மீண்டும் இணைவது உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில்
அவதானம் செலுத்தவுள்ளதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.