கொரோனா தொற்றினால் தாய் உயிரிழப்பு! தனிமைப்படுத்தலை மீறி யாழ்ப்பாணம் வந்த மகன், சுகாதார பிரிவு வழக்கு தாக்கல்..

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றினால் தாய் உயிரிழப்பு! தனிமைப்படுத்தலை மீறி யாழ்ப்பாணம் வந்த மகன், சுகாதார பிரிவு வழக்கு தாக்கல்..

கொரோனா தொற்றினால் தாய் உயிரிழந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மகன் வீட்டிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் மகனுக்கு எதிராக சுகாதார பிரிவினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வவுனியா கோவில்குளம், 5ம் ஒழுங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தாய் (வயது 73) மற்றும் மகன் (வயது 20) ஆகியோர் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். 

 இந்நிலையில் தாய்க்கு தொற்று தாக்கம் அதிகரித்தமையால் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை மரணமடைந்துள்ளார். தாய் மரணமடைந்த தகவலை தெரியப்படுத்தி, 

குடும்பத்தினரை தகனக் கிரியைக்கு அழைப்பதற்காக பொதுசுகாதார பரிசோதகர்கள் அவர்களது தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு சென்றபோது தொற்றுக்குள்ளான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மகன் வீட்டில் இருக்கவில்லை. 

இது தொடர்பில் வீட்டில் இருந்த அவர்களது உறவினர்களிடம் விசாரித்தபோது அவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொதுசுகாதார பரிசோதகர்கள், 

தனிமைப்படுத்தல் சட்ட விதி முறைகளை மீறி செயற்பட்ட இந்த இளைஞனுக்கு எதிராக வவுனியா பொலிஸார் ஊடாக வழக்கு தாக்கல் செய்துள்ளனர். வழக்கினை விசாரித்த வவுனியா நீதிமன்றம் இந்த இளைஞனை, 

தற்போது அவர் நிற்கும் இடத்தில் தனிமைப்படுத்துமாறும், எதிர்வரும் 24 ஆம் திகதி மன்றில் முற்படுத்துமாறும் கட்டளை பிறப்பித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு