SuperTopAds

21ம் திகதியுடன் ஊரடங்கு தளர்த்தப்படுமா..? நாளை கூடுகிறது உயர்மட்ட குழு, புதிய கட்டுப்பாடுகள் குறித்த பரிந்துரைகளும் பரிசீலணை..

ஆசிரியர் - Editor I
21ம் திகதியுடன் ஊரடங்கு தளர்த்தப்படுமா..? நாளை கூடுகிறது உயர்மட்ட குழு, புதிய கட்டுப்பாடுகள் குறித்த பரிந்துரைகளும் பரிசீலணை..

ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 21ம் திகதியுடன் தளர்த்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக நாளை ஜனாதிபதி தலைமையில் கூடவுள்ள உயர்மட்ட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும். என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

நாடு திறக்கப்பட வேண்டும் என்றால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைப் பரிந்துரைக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாளை இடம்பெறும் கொவிட் தடுப்பு ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் 

உரிய பரிந்துரைகள் அளிக்கப்படும் என்று இராணுவ தளபதி கூறினார். எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை நாடுமுழுவதும் தொடர்வதற்கு சிறப்பு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.