பரபரப்பான சூழலில் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்கவுள்ள நாமல்..!
அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் புகுந்து தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் இருத்தி அமைச்சர் லொஹான் ரத்வத்தே கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இன்று சிறைச்சாலைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அமைச்சர் நாமலின் இன்றைய விஜயம் தமிழ் அரசியல் கைதிகளின் வேண்டுகோளுக்கு அமைய இடம்பெறுவதாகவும், இதன்போது அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வார் எனவும் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.