104 வயதான மூதாட்டி உட்பட 11 கொவிட்-19 மரணங்கள் பதிவு! தீவிர அபாயத்தில் வவுனியா மாவட்டம்..
104 வயதான மூதாட்டி உட்பட வவுனியா மாவட்டத்தில் 11 கொவிட் -19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
மரணித்த 11 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியா, மூனாமடு கிராமத்தைச் சேர்ந்த 104 வயது கதிரவேல் அமிர்தம் என்ற மூதாட்டியே கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களில் அதிகூடிய வயதுடையவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.