மேன் வெர்சஸ் வைல்ட நிகழ்ச்சிக்காக காட்டுக்கு செல்லும் பிரபல நடிகர்!!

ஆசிரியர் - Editor II
மேன் வெர்சஸ் வைல்ட நிகழ்ச்சிக்காக காட்டுக்கு செல்லும் பிரபல நடிகர்!!

உலக புகழ் பெற்ற டிஸ்கவரி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்சுடன் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் ஏற்கனவே பங்கேற்றி அடர்ந்த காட்டுக்குள் சென்று வந்தனர்.

மேலும் சூப்பஸ்டார் ரஜினிகாந்தும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, வனப்பகுதிக்கு சென்றார். இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் மாலத்தீவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.


Radio