வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தை அடுத்து அவதானம் மிகுந்த மாவட்டமாக மாறிவரும் மற்றொரு மாவட்டம்..!
வவுனியா மாவட்டத்தில் 50 டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கடந்த 12 நாட்களில் 1651 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார திணைக்களம் தொிவித்துள்ளது.
திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 12 நாட்களாக வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 63 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு அடுத்ததாக மிகவும் அவதானம் மிகுந்த மாவட்டமாக தற்போது வவுனியா மாறி வருவதாகவும் பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பேணி,
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு வவுனியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.