SuperTopAds

சர்வதேச நீதி கேட்பவர்கள் எவ்வாறு ஒரு பக்கத்தை விசாரிக்க கேட்பது?.. கஜேந்திரகுமாரும் இரு தரப்பையும் விசாரிக்க சம்மதித்தார் என்கிறார் சுமந்திரன்..

ஆசிரியர் - Editor I
சர்வதேச நீதி கேட்பவர்கள் எவ்வாறு ஒரு பக்கத்தை விசாரிக்க கேட்பது?.. கஜேந்திரகுமாரும் இரு தரப்பையும் விசாரிக்க சம்மதித்தார் என்கிறார் சுமந்திரன்..

சர்வதேச நீதி கேட்டு செல்பவர்கள் எவ்வாறு இவர்களை மட்டும் விசாரி அவர்களை விசாரிக்காதே என எவ்வாறு கூற முடியுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

நேற்றுமுன் தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் ஐநாவுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்

என்னை மட்டும் விசாரி அவர்களை விசாரிக்காதே என சொல்லுற மாதிரி ஊடகங்கள் செய்திகளை பொறுப்புடன் வெளியிட வேண்டு. சர்வதேச நீதி விசாரணை கேட்பவர்கள் ஒரு பக்கத்தை மட்டும் விசாரி என கேட்க முடியாது 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரு பக்கத்தையும் விசாரிக்குமாறு பாராளுமன்றத்தில் கூறியிருந்தமை கன்சாடின் மூலம் வெளிவந்துள்ளது. தமிழரசு கட்சியை ஐ.நாவுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் சக தமிழ் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்கள்.

ஐ.நாவுக்கான வரவினை தயார்படுத்தும் பணியில் என்னை அமர்தியபொது எம்முடன் கலந்துரையாடிய சகல தமிழ் கட்சிகளும் ஆதரவு தந்தே அதனை தயாரிக்க சொன்னார்கள். ஆனால் நாம் தயாரித்த வரைபினை அவர்களுக்கு அனுப்பியபோது 

அவர்கள் தாங்கள் ஒரு அறிக்கையை கையெழுத்திட்டு அனுப்பி விட்டதாக அப்போதுதான் எமக்குத் தெரிந்தது. நாம் தயாரித்தது வரைபு அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றால் எம்மிடம் தெரிவித்திருக்கலாம் 

அதனை மாற்றுவதற்கு கூட நாம் தயாராக இருந்தோம் ஆனால் சக கட்சிகள் எம்முடன் கலந்துரையாட முன்பே தாங்களாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டன.கடந்த மார்ச் மாதம் ஐநாவுக்கு அறிக்கை தயாரிக்கப்பட்ட போது சக தமிழ் கட்சிகளிடம் இருந்து 

வேறுபட்ட அறிக்கைகள் ஐநாவுக்கு சென்றது இது இன்று நேற்று நடைபெறும் விடயமல்ல.இப்போது கூட நாலாவது அறிக்கையும் ஐநாவுக்கு சென்று விட்டது என செய்திகள் வந்திருக்கின்றன.

ஒன்பது பேர் கையெழுத்திடடு அனுப்பிய குறித்த அறிக்கையில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளார்கள். சிலர் தாம் அவ்வாறு கையெழுத்திடவில்லை என கூறுகின்ற நிலையில் அதன் உண்மைத் தன்மை தெரியாமல் நடவடிக்கை எடுக்க முடியாது. 

பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தை அதே மாதிரியாக இடுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் நிலையில் அதனை கட்சி என்ற ரீதியில் ஆராய்வோம். எமக்குள்ளே பிரச்சனைகள் வரும் போகும் ஆனால் எல்லோரும் ஒற்றுமையாக தான் செயற்படுகிறோம் 

கூட்டமைப்பு பிரிந்து விட்டது எனக் கருத வேண்டாம். எதிர்வரும் கிழமை ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான வாய்மொழி மூலமான அறிக்கை வர இருக்கிறது.அன்று தொடக்கம் இன்றுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் 

கையெழுத்திட்ட அறிக்கையை அனுப்பப்படுகிறது. ஒரு தடவை மட்டும் விக்னேஸ்வரன் கையெழுத்திட்டார். சிலர் யோசிக்கலாம் ஐ.நா மனித உரிமை பேரவையில் கட்சிகள் உடையை மட்டும் தான் எடுபடும் என யோசிக்கலாம்.ஆனால் அவர்கள்

அடிமட்டத்தில் வேலை செய்கின்ற சிவில் அமைப்புகளிடம் இருந்து பல தகவல்களை ஏற்கனவே திரட்டி விடுவார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடர்பில் அவர்களிடத்து நல்ல மரியாதை இருக்கிறது.

ஏனெனில் நீதி விசாரணை வேண்டும் எனக் கோருபவர்கள் பக்கச்சார்பின்மை, நடுநிலைமை ஆகியவற்றை நாம் வழங்கும் அறிக்கைகள் மூலம் அவர்கள் தெளிவாக விளங்கிக் கொண்டார்கள்.2011.03.31 ஆம் திகதி வெளிவந்த தருஸ்மன், சூகா, ரட்ணம். 

ஆகிய நிபுணர் குழு அறிக்கை சகலரும் பார்வையிடுவது அவசியம் அவருக்கே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பொறுப்புக்கூறலை ஏற்படுத்த வழிவகுத்தது.நாங்கள் அமெரிக்கா சென்றபோது ராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்தித்து 

இலங்கையில் படையினர் மேற்கொண்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததன் அடிப்படையில் அமெரிக்கா இலங்கை விவகாரத்தை முன்னின்று செயல்படுத்த உதவியது.எனினும் அமெரிக்கா சொன்னதற்கு இணங்க ஐ.நாவில் நாடுகளின் அனுசரணையை பெறுவதற்காக 

முதலில் ஓர் பிரகடனத்தை வெளியிடுமாறு கோரினர் அதே மாதிரியாக 2012ம் 2013ம் இடம்பெற்றது.2014இல் சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கோரி அதனை நிறைவேற்றினோம் பலர் கோஷங்களை எழுப்பினார்கள் 

கொடிகளை எரித்தார்கள் .30.1 தீர்மானம் கலப்பு நீதிமன்ற பொறிமுறையை உள்ளடக்கியதாக அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.தமிழரசு கட்சி புலிகளை காட்டிக் கொடுத்து விட்டது என தலைப்பு செய்திகள் வந்த நிலையில் 10 வருடங்கள் முன்பே 

தயாரிக்கப்பட்ட அறிக்கையை தற்போது தமிழரசுக்கட்சி தயாரித்ததாக சிலர் கூறுகின்றனர். ஆகவே எமக்குள் பிரச்சனைகள் ஏற்படுவது வழமை ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு பிரிந்து விட்டார்கள் என்பது உண்மைக்கு புறம்பானது என அவர் மேலும் தெரிவித்தார்.