SuperTopAds

வடக்கில் ஒரு மாவட்டத்தில் மட்டும் ஆபத்தான டெல்டா திரிபு வைரஸ் தொற்றுக்குள்ளான 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்! சுகாதார பிரிவு அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
வடக்கில் ஒரு மாவட்டத்தில் மட்டும் ஆபத்தான டெல்டா திரிபு வைரஸ் தொற்றுக்குள்ளான 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்! சுகாதார பிரிவு அதிர்ச்சி தகவல்..

வவுனியா மாவட்டத்தில் ஆபத்தான டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளான 35 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர். 

கொரோனா நோயாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்றிரவு (10) வெளியாகின.

அதில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 பேருக்கு டெல்ட்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தொற்றுக்கு உள்ளானவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் 

சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதேவேளை, டெல்ட்டா வைரஸ் தொற்று பரவல் அடைவதால் மக்கள் விழிப்புணர்வுடன் 

சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர்.