சந்திரமுகி 2 ஆம் பாகத்திலும் வைகைப்புயல்!!
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின், 2 ஆம் பாகம் படத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் வைகைப்புயல் வடிவேலுவுக்கு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்ததால் பல வருடங்களாக அவர் நடிக்கவில்லை.
இந்நிலையில் அண்மையில் நடந்த சமரச பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டு தடையை நீக்கி உள்ளதால் புதிய படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். குறிப்பாக தற்போது அவர் 5 படங்களை தன்வசம் வைத்துள்ளார்.
இதன்படி நாய்சேகர் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தை சுராஜ் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.
இந்த நிலையில் பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் சந்திரமுகி 2 ஆம் பாகத்திலும் வைகைப்புயல் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.