தமிழரசுக் கட்சி எந்த கடிதமும் அனுப்பவில்லை!

ஆசிரியர் - Admin
தமிழரசுக் கட்சி எந்த கடிதமும் அனுப்பவில்லை!

ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பாக தமிழரசுக் கட்சி எந்த கடிதமும் அனுப்பவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறினார்.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் வவுனியாவிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்திற்குச் சென்றனர்.

 இதன்போது வவுனியாவில் பொதுமக்களின் காணிகள் வனவள திணைக்களத்தினராலா எல்லைப்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 அதைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து சொல்லும் சுமந்திரன்,

 வவுனியா மாவட்டத்திலுள்ள இத்திகுளம் பிரதேசத்திலே நீண்ட கால மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  அதை ஒரு எல்லைப் பிரச்சினையாக மாற்ற முயற்சிப்பதாக தெரிகின்றது.  வவுனியா எல்லைக்குள் இருந்ததை வவுனியா தெற்கு பிரிவுக்குள் காட்டுவதற்கு முயற்சிக்கிறது.  இது தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக நாங்கள் பிரதேச செயலாளரோடு பேசியிருக்கின்றோம்என குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதேநேரம் இவ்வாறான விடயம் இனியும் தொடர்ந்து நடைபெறுவதாக இருந்தால் நாங்கள் மேலிடத்தில் தெரியப்படுத்தவும் இது தொடர்பாக குரல் எழுப்புவதற்கு முடிவெடுத்திருக்கின்றோம்.  இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம் என்றும் அவர் கூறினார்.

 இதே நேரம் ஜெனிவாவுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் குறித்து கருத்த வெளியிட்ட சுமந்திரன், ஜெனிவாவுக்கு தமிழரசுக் கட்சி எந்தவிதமான கடிதத்தையும் அனுப்பவில்லை.  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கையொப்பத்தில் கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

 நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஒரு கட்சியே, அந்த கூட்டமைப்பாக தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.  ஏனைய கட்சிகள் வேறாக செயல்பட்டு வருவது தொடர்பாக நாங்கள் அவர்களுடன் பேசலாம்.  ஆனால் தமிழரசுக் கட்சியை பொறுத்தவரையில் கூட்டமைப்பை உடைத்து தனியாக செயல்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு