SuperTopAds

ஐ.நாவுக்கு தமிழரசுக் கட்சி அனுப்பிய அறிக்கை..! தலைவர் மாவை மௌனம்..

ஆசிரியர் - Editor I
ஐ.நாவுக்கு தமிழரசுக் கட்சி அனுப்பிய அறிக்கை..! தலைவர் மாவை மௌனம்..

ஐ.நா அமர்வுக்காக தமிழரசுக் கட்சியின் பெயரில் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்ட வரைபு அறிக்கை தொடர்பில் அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மௌனம் காத்து வருகிறார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் ஒன்றாக இணைந்து அறிக்கை தயாரிப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட போதிலும் பின் இரண்டு அறிக்கைகளாக பிரிந்து ஐ.நாவுக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழரசுக் கட்சி அனுப்பிய அறிக்கையில் இலங்கையில் இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இழைத்த போர் குற்றங்கள் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும். 

என்ற கருத்து உள்ளடக்கப்பட்டமை சக கட்சிகளிடையே முரண்பாட்டை தோற்றுவித்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பழமையான கட்சியான தமிழரசுக் கட்சி ஐநாவுக்கு அனுப்பிய அறிக்கையானது வெளிநாட்டு 

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடாக சக தமிழ் கட்சியினரிடம் கையெழுத்து பெற முயற்சித்ததாகக் கையெழுத்திடாத தமிழ் கட்சி பிரதிநிதிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இவ்வாறான நிலையில் தமிழரசுக்கட்சி தயாரித்த அறிக்கை ஏற்கனவே ஐநவுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அதை அறியாதவர் போல் அறிக்கை திருத்தப்படும் என சக தமிழ் கட்சியின் தலைவர்களுடன் 

இணையவழியில் கலந்துரையாடியமை சக தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் கோபத்தை உண்டு பண்ணியது. இன் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டபோது 

திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் குழு கூட்டம் இடம்பெறவுள்ளது முடிவுற்றதும் தெளிவான ஓர் முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தார். எனினும் தமிழரசுக் கட்சியின் பெயரில் ஐ.நாவுக்கு அனுப்பப்பட்ட வரைபு அறிக்கை தொடர்பில் 

அதன் தலைவர் மாவை சேனாதிராஜாவினால் உறுதியான கருத்துக்களை வெளியிட முடியாமல் உள்ளமை தமிழரசுக் கட்சியின் தலைவர் யாரோ ஒரு நபர் அல்லது ஒரு குழு அவரை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என எண்ணத் தோன்றுகிறது.

ஒரே நிலைப்பாட்டில் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகள் என சந்திப்புக்களை நடத்திவரும் தமிழ் கட்சிகள் தமிழ் மக்கள் தொடர்பில் ஐநாவில் ஓரணியில் செயற்பட முடியாமல் உள்ளது. ஆகவே தமிழரசுக் கட்சியின் ஆளுமையுள்ள தலைவர்களினால் 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழிநடத்தப்பட்ட நிலையில் இன்று அதே கட்சியின் தலைவரால் சுயமாக கட்சியை வழிநடத்த முடியாமல் போவது கட்சி மீது தமிழ் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குறைப்பதாகவே அமையும்.