சர்ச்சை காட்சியில் நடித்தது குறித்து விளக்கமளித்த லாஸ்லியா!
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்ற லாஸ்லியா தனது இலங்கை தமிழ் மொழியிலும், குறும்புத்தனமான செயல்களாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.
அந்த சீசனில் லாஸ்லியா, கவின், முகேன் தர்ஷன், சாண்டி உள்ளிட்ட அனைவரும் இணைந்து பிக்பாஸ் வீட்டில் பாடல்கள் பாடுவது, மற்றவரை போல் மிமிக்ரி செய்து பேசுவது, நடனமாடுவது என ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான போட்டியாளர்களாக மாறினர். இவர்கள் ஐந்து பேருக்கு மட்டும் அதிகமான ரசிகர்கள் இருந்தனர். இறுதி வரை இவர்கள் பிக்பாஸ் இல்லத்தில் இருந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு லாஸ்லியாவுக்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வரிசையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் லாஸ்லியா இணைந்து நடித்திருக்கும் பிரண்ட்ஷிப் படம் விரைவில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் தர்ஷன் இணைந்து லாஸ்லியா நடித்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதில் தர்சன் மற்றும் லாஸ்ஸியா இடையே மிகவும் நெருக்கமான காட்சிகள் இடம் பெற்றது. இதை பார்த்த சிலர் பிக்பாஸ் இல்லத்தில் அண்ணன் தங்கையாக பழகி வந்த நிலையில், தர்ஷனுடன் ஏற்படும் காட்சிகளில் எப்படி நடிக்க முடிந்தது என லாஸ்லியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும் லாஸ்லியா மற்றும் தர்ஷனின் படுக்கை அறை காட்சிகளை வைத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் நடிகை லாஸ்லியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தங்கள் இருவர் மீதான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய லாஸ்லியா, “தர்ஷன் எனக்கு அண்ணன் மாதிரி. படத்தில் வரும் ரொமான்டிக் காட்சிகள் வெறும் நடிப்பு மட்டுமே. யாரும் சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம்.
ஒரு படத்தை படமாக மட்டும் பாருங்கள் நிஜவாழ்க்கையில் ஓப்பிடாதீர்கள். அந்த காட்சியை எடுக்கும்போது நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டே செம ஜாலியாக தான் எடுத்து முடித்தோம். இது வெறும் நடிப்பு மட்டுமே ”என கூறினார்.