“ஈழம்” என்றால் என்ன? நினைவுதுாபி தொடர்பாக மறவன்புலவு சச்சிதானந்தத்திடம் பொலிஸார் விசாரணை..
யாழ்.மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவாக நினைவு துாபி அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக நினைவு துாபியை அமைத்த மறவன்புலவு சச்சிதானந்தத்திடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
“காணவில்லை என்பதால் உங்களை நாம் மறக்கவில்லை. நீங்கள் திரும்பினாலும் திரும்பாவிடினும் நம் உள்ளத்துள் நினைவுள் நீங்காதோரே. வரலாறு உங்கள் புகழைப் பேணும்.ஈழத் தமிழர் ஈந்த ஒளி விளக்குகள் நீங்கள்.
உங்கள் நினைவால் உள்ளம் நெகிழும் அனைவர் சார்பிலும் 80 வயதான மறவன்புலவு க.சச்சிதானந்தன்” என்று தெரிவிக்கப்பட்டு 32 பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களுடன் நினைவுத் தூபி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு வந்த பொலிஸார் தன்னை விசாரணைக்கு உட்படுத்தியதாகவும், ஈழம் என்றால் என்ன? என்று அவர்கள் தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.