விடுதலை புலிகளின் போர் குற்றம் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும்! தமிழரசுக் கட்சி அறிக்கையால் வெடித்தது பூகம்பம்..
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் விசாரிக்க வேண்டும். என சுமந்திரன் தயார்படுத்தலில் தமிழரசுக் கட்சியால் ஐநாவுக்கு அனுப்பிய தீர்மான வரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ் சாட்டியுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கமானது இறுதியுத்தத்தில் தாம் போர்க்குற்றங்களை இழைக்வில்லை என தெரிவித்து வருகிறது. இந் நிலையில் ஐ.நாவுக்கு தமிழரசுக் கட்சி தனியாக தயாரித்து
அனுப்பிய தீர்மான வரைவில் பாங்கி மூனின் கடந்தகால அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை மேற்கோள் காட்டி தமிழீழ விடுதலைப்புலிகளின் போர்க் குற்றம் தொடர்பிலும் விசாரிக்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சி கோரியுள்ளது. ஐநாவுக்கான வரபினை தயாரிப்பதற்கு முன் ஒரே நிலைப்பாட்டில்
உள்ள தமிழ் தேசியக் கட்சிகள் இணைய வழியூடாக பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தோம்.அதன் அடிப்படையில் ஐநாவுக்கான வரைபினை தயாரிப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில் தமிழரசுக்கட்சி குறித்த வரைவு தயார்ப்படுத்தலில் ஒத்துழைக்கவில்லை.
ஐ.நாவில் கடந்த காலங்களில் இலங்கை தொடர்பாக முன்னாள் ஆணையாளர் பாங்கி மூன் வெளியிட்ட இலங்கை அரசாங்காத்தையும் தமிழர்களை விடுதலை புலிகளும் இழைத்த போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அடியொற்றி வரைபு தீர்மானிக்கப்பட்டது.
இதனை வெளி நாட்டில் இயங்குகின்ற அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று தயாரித்து அதனை சுமந்திரன் தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டையும் தெரிவித்து அனுப்பியுள்ளனர்.இலங்கை அரசாங்கம் தான் போர்க்குற்றங்களில் இடம்பெற ஈடுபடவில்லை என தெரிவித்து வரும் நிலையில் தமிழரசுக் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளின்
போர் குற்றம் தொடர்பில் விசாரிக்க வேண்டுமென ஏற்றுக் கொள்வது தமிழ் மக்கள் தொடர்பில் ஐநாவின் கவனத்தை குறைக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் போர் குற்றம் இழைத்திருந்தால் ஐ.நா விசாரணைக்குழு ஒன்றை அமைத்து உறுதி செய்யட்டும்.
அதனை விடுத்து யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இலங்கை அரசினால் தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி வரும் நிலையில் தமிழரசுக் கட்சி இரண்டையும் சம தளத்தில் காட்ட நினைப்பது கவலை அளிக்கிறது. ஆகவே ஐநா இலங்கை தொடர்பில் கடுமையான நிலைப்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில்
தமிழரசுக் கட்சியானது அரசாங்கத்தை சந்தோசப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.