பரா ஒலிம்பிக்கின் தங்க மகனுக்கு 5 கோடி பணப்பரிசு!!

ஆசிரியர் - Editor II
பரா ஒலிம்பிக்கின் தங்க மகனுக்கு 5 கோடி பணப்பரிசு!!

பரா ஓலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை பெற்றுக் கொடுத்த தினேஷ் பிரியன்தவுக்கு விளையாட்டுத் துறை அமைச்சினால் 5  கோடி ரூபா பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. 

இலங்கை விளையாட்டு துறை வரலாற்றில் தனிநபர் விளையாட்டுப் பிரிவில் வெற்றியீட்டிய ஒருவருக்கு வழங்கப்படவுள்ள அதிகூடிய பணப்பரிசுத் தொகை இதுவாகும். 

மேலும், பராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்த துலான் கொடிதுவக்குவுக்கு 2 கோடி ரூபா பணப்பரிசும், பயிற்றுநரான பிரதீப் நிஷாந்தவுக்கு ஒரு கோடியே 75 இலட்சம் ரூபா வழங்குவதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தினேஷ் பிரியன்த, துலான் கொடிதுவக்கு உள்ளிட்ட இலங்கை மெய்வல்லுநர் குழாம் நானை மறுதினம் 7 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Radio