SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் மேலும் 370 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! தீவிர அபாயம் தொடர்கிறது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 370 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! தீவிர அபாயம் தொடர்கிறது..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 370 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலகம் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் இணைந்து வெளியிட்ட தினசரி தொற்றாளர்கள் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொற்றுக்குள்ளானவர்களில் 31 பேர் பிசிஆர் பரிசோதனையிலும் 339 பேர் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 133 பேரும், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 66 பேரும், 

யாழ்ப்பாணம் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 27 பேரும், கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 20 பேரும், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 19 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறையில் 9 பேரும், நல்லூரில் 26 பேரும், சண்டிலிப்பாயில் 7 பேரும், உடுவிலில் 35 பேரும், தெல்லிப்பழையில் 7 பேரும், வேலணையில் 6 பேரும், மருதங்கேணியில் 14 பேரும், காரைநகரில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் மாவட்டத்தில் 2020 மார்ச்சிலிருந்து நேற்று மாலை வரை 13 ஆயிரத்து 310 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 265 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் 

1161 குடும்பங்களைச் சேர்ந்த 3739 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.