மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய 3 கொரோனா தொற்றாளர்கள் ஊருக்குள் உல்லாசம்! 32 பேருக்கு தொற்று உறுதி, கிராமமே முடக்கப்படும் நிலை..
சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 3 பேர் வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடிய ஊருக்குள் சுற்றித் திரிந்த நிலையில் அவர்களுடைய கிராமத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு கூறியுள்ளது.
தப்பி ஓடிய கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்த சுகாதார பிரிவினர் குறித்த கிராமத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு ஏழு நபர்களை தனிமைப்படுத்தியிருந்தனர். எனினும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அதனை கடைப்பிடிக்காமல் வெளியில் சுற்றித்திரிந்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதார பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து குறித்த பகுதியைச் சேர்ந்த 150 பேரிடம் நேற்றையதினம் அன்டிஜன் பரிசோதனையினை முன்னெடுத்தனர். அதில் 32 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் கிராமமே முடக்கப்படும் நிலை காணப்படுகின்றது.
குறித்த பகுதியில் வசிக்கும் அனேக மக்கள் நாடோடிகள் இனம் என்பது குறிப்பிடத்தக்கது.