பராலிம்பிக் போட்டிகளில் உலக சாதனை படைத்த இலங்கை வீரர்!!
டோக்கியோவில் நடைபெற்று வரும் பராலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இதற்கமைய, கு46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட தினேஷ் பிரியந்த ஹேரத் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
கெக்கிராவ பகுதியை சேர்ந்த 35 வயதான தினேஸ் பிரியந்த கெக்கிராவ - இப்பலோகம - காகம தாதுசேன வித்தியாலயத்தில் கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றி 2004 ஆம் ஆண்டு அவர் இராணுவத்தில் இணைந்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு கிளிநொச்சி பகுதியில் உபாதையடைந்தமையை அடுத்து இராணுவத்தின் ஈட்டி எறிதல் போட்டிகளுக்கான பயிற்சியில் தினேஷ் பிரியந்த ஹேரத் ஆரம்பித்தார்.
2017 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பராலிம்பிக் போட்டிகளில் தினேஷ் பிரியந்த ஹேரத் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.