SuperTopAds

தி பேமிலி மேன் 2 வெப் தொடர் சர்ச்சை -மன்னிப்பு கேட்ட சமந்தா-

ஆசிரியர் - Editor II
தி பேமிலி மேன் 2 வெப் தொடர் சர்ச்சை -மன்னிப்பு கேட்ட சமந்தா-

அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய தி பேமிலி மேன் 2 வெப் தொடர் சர்ச்சை குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த சமந்தா தற்போது அத் தொடர் குறித்து மன்னிப்பு கோரியுள்ளார். 

கடந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியான தி பேமிலி மேன் 2 தொடரில் இலங்கைத் தமிழர்களை பற்றியும், விடுதலைப்புலிகளை பற்றியும் தவறான தகவல்கள் இடம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. 

தமிழக அரசும், சில அரசியல் கட்சிகளும் இத்தொடருக்கு தடை விதிக்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன. ஆனால், எதிர்ப்புகளை மீறி இந்த தொடர் வெளியானது.

இந்த சர்ச்சைகள் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த சமந்தா, அண்மையில் வழங்கிய நேர்காணலில் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: 

மக்களுக்கென இருக்கும் சொந்த கருத்துக்களை நான் மதிக்கிறேன். நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை, அப்படி நடந்திருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 

ஆனால், இந்த தொடர் வெளியான பின்னர் பல சத்தங்கள் நின்றுவிட்டது. இது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவ்வளவு ஒன்றும் மோசமாக இல்லை என்று சிலர் சொன்னதையும் பார்த்தேன் என்று கூறியுள்ளார்.