SuperTopAds

இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வகத்தில் என்ன செய்கிறார்கள்?

ஆசிரியர் - Admin
இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வகத்தில் என்ன செய்கிறார்கள்?

சினோவாக் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்கும் செயற்றிட்டத்தில் சீனாவுடன் இணைந்து இலங்கை செயற்படுவதாக கூறப்படுகின்றது.
இதற்காக கண்டியிலுள்ள பல்லேகெல்லேவில் மருந்துவ ஆலை இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் தடுப்பூசிகளைப் பயன்படுத்திய சில நாடுகள்,அதாவது  சினோஃபார்ம் மற்றும் சினோவாக் தடுப்பூசி செயற்றிட்டத்தை நிர்வகித்த போதிலும்கூட வைரஸின் புதிய பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்த கவலைகளுக்கு மத்தியில் அவர்கள் தற்போது ஃபைஸரை ஒரு பூஸ்டராக நிர்வகித்து வருகின்றனர் என உலக நாடுகள் குறிப்பிடுகின்றன.

வைரஸின் தோற்றம், திறனற்ற தடுப்பூசிகள் மற்றும் சீன சமூகக் கட்சி (சி.சி.பி) பின்பற்றும் ஆக்கிரமிப்பு மற்றும் புவிசார் அரசியல் வரைபடத்தின் மீது சீனா எதிர்கொள்ளும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் இலங்கை கண்மூடித்தனமாக உள்ளதாகவும் பல நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளதாவது,  உலக சுகாதார அமைப்பின் இன் இறுதி ஒப்புதலுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்,

உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு, கண்டியிலுள்ள மருந்து ஆலைக்குச் சென்று வசதிகளை அங்கீகரித்த பின்னர் திட்டம் தொடங்கப்படும்.

மேலும் உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலைத் தொடர்ந்தே இலங்கையர்களுக்கு அவசர தடுப்பூசியாக சினோவாக் தடுப்பூசியை வழங்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் தீர்மானிக்கும்.

மேலும் உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்தவுடன் சீனாவின் கெலுன் லைஃப் சயின்சஸ் மருந்தகம்,சினோவாக் தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு இலங்கையில் இருந்து விநியோகம் செய்யும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உலகில் 4.31 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றத்துக்கு சீனாதான் காரணமென குற்றச்சாட்டு காணப்படுகின்ற நிலையில்,சீனாவிற்காக கண்டியில் ஆய்வகமொன்று வரவுள்ளதாக சில நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் வைரஸ் பரவுவதிலிருந்து உலகைக் காப்பாற்றுவதற்கான அதன் ‘உலகளாவிய அர்ப்பணிப்பு’என்ற பெயரில்,சீனா அதன் தடுப்பூசி இராஜதந்திரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக சர்வதேச நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.

ஆனாலும் தற்போதைய இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டுகளை புறக்கணிக்கவில்லை.

ஆனால்,ஆச்சரியப்படும் விதமாக சீனாவும் இலங்கையும் ஹாங்கோங்கை மையமாகக் கொண்டு இயங்கிய கொரோனா பரிசோதனை நிலையத்தில் ஆராய்ச்சியாளர்களாக இருந்த இரண்டு இலங்கை விஞ்ஞானிகளைப் பற்றி பேசவோ கருத்து தெரிவிக்கவோ இதுவரையும் இல்லை.

பொதுவாக,தங்கள் நாடுகளின் நலன்களுக்கு சேவை செய்யும் பிரபலத்தின் தலைமையில் இருப்பவர்களை சீனர்களும் இலங்கையர்களும் தவறவிட மாட்டார்கள்.

சீனர்களுக்காக வேலை செய்யும் இந்த இரண்டு பிரபலமான இலங்கை விஞ்ஞானிகள் பற்றி பாராட்டத்தக்க ட்வீட்கள் இல்லை. மேலும் இந்த இரண்டு கதாபாத்திரங்கள் யார் என்று இதுவரை யாருக்கும் தெரியாது.

பி.எச்.டி.வைத்தியர் லி-மெங் யான், சீனாவின் தெற்கு மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் மத்திய தெற்கு பல்கலைக்கழகத்தின் இரண்டு உயர்மட்ட மருத்துவப் பள்ளிகளில் படித்த வைரலாஜிஸ்ட் மற்றும் சுயாதீன கொரோனா வைரஸ் நிபுணர், ஹாங்கோங் பல்கலைக்கழகத்தில் (எச்.கே.யு) பொது சுகாதாரப் பள்ளியில் முனைவர் பட்டம் பெற்றவர்.

ஆயுதமயமாக்கப்பட்ட கொரோனா வைரஸின் பின்னால் சீன சமூகக் கட்சி எப்படி இருந்தது என்பதை தைரியமாக தெரியப்படுத்தியவர்.

வைரஸ் பற்றிய தகவல்கள் கசிந்த பின்னர் அவர் அமெரிக்காவில் புகலிடம் கோரி தஞ்சம் புகுந்தார்.மேலும் இந்த வைரஸ்,ஒரு கட்டுப்பாடற்ற உயிரி ஆயுதமாக ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

வுஹானில் வைரஸ் பரவுவது‘ஆய்வக கசிவின்’விளைவு அல்ல என்பதையும் அவர் தன் ஆய்வின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

வைரஸின் உண்மையான தன்மையையும்,அவர்களின் சர்வதேச பயோவீபன்ஸ் ஆராய்ச்சியை மறைக்கப் பயன்படுத்தப்படும் சி.சி.பி.யின் ஏமாற்றும் முறைகளையும் லி-மெங் யான் வெளிப்படுத்தினார்.

வைத்தியர் லி-மெங் யானின் கணவர் (Dr.Ranawaka Arachchige Prasad M. Perera,) ஒரு இலங்கையர் மற்றும் அவர்  உயிரியல் தொடர்பான வைத்தியராவார்.

இவரை,சி.சி.பி நிறுவனம்,பிரிந்த மனைவியைப் பின்தொடர அமெரிக்காவிற்கு இரகசியமாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

இதேவேளை ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ கேணல் மற்றும் கொவிட்-19 குறித்து ஆராயும் நிபுணர்,வைத்தியர் லாரன்ஸ் செலின், சீனாவையும் அதன் பயோவார் மூலோபாயத்தையும் பின்பற்றி ஆராய்ந்து வருகின்றார்.

இந்நிலையில்  வைத்தியர் லி-மெங் மற்றும் சி.சி.பி. நிறுவன உறுப்பினர்களை  சமூக ஊடகங்களில் பின் தொடர்ந்தார்.
இதனூடாக  சி.சி.பி.நிறுவனம்,வைத்தியர் லி மெங்கை,அவரது  இலங்கை கணவரை பயன்படுத்தி எப்படி வேட்டையாட முயற்சிக்கின்றது என்பதை அம்பலப்படுத்தினார்.

மேலும் வைத்தியர் ரணவக்க,வைரல் நோயெதிர்ப்பு மருத்துவத்தில் பி.எச்.டி.இ எச் 1 பி விசா பெற்றிருப்பதை வைத்தியர் லி-மெங் டுவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் 2 வருடங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டுடன் மார்ச் 2,  2021 அன்று அமெரிக்காவிற்குள் நுழைந்தார். அவர் ஏன் அமெரிக்கா வந்தார். இன்னும் தெளிவாக இல்லை. ஆனால் அவர் தன்னை கொல்வற்கு விஷம் உட்பட பல்வேறு வழிகளை கையாண்டதாகவும் வைத்தியர் லி-மெங் கூறியுள்ளார்.

இதேவேளை ஹாங்கோங்கை மையமாகக் கொண்டு இயங்கிய கொரோனா பரிசோதனை நிலையத்தில் பணிப்புரிந்த மற்றுமொரு இலங்கை விஞ்ஞானி, வைத்தியர் மாலிக் பீரிஸ், வைத்தியர் லி-மெங்கின் கல்வி மேற்பார்வையாளராவார்.

அத்துடன் வைத்தியர் லி-மெங், அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றதன் பின்னர் வைத்தியர் பீரிஸும் ஒரு வாரத்தில் இலங்கையை சென்றடைந்துள்ளார்.

பேராசிரியர் பீரிஸ் ஒரு இரகசிய இடத்தில் ஆபத்தான வைரஸ்களை வைத்திருந்ததாக வைத்தியர் லி-மெங் கூறினார். ஏனெனில் இந்த வைரஸ்களை ஆயுதமாக்குவது குறித்து இரகசிய ஆராய்ச்சி நடத்த சி.சி.பி உத்தரவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பேராசிரியர் பீரிஸுக்கு 2016 ஆம் ஆண்டில் சிறந்த இலங்கையர் விருது வழங்கப்பட்டது. எனினும் வைத்தியர் லி மெங், ஹாங்கோங் பொது சுகாதார பள்ளியில் வைராலஜி மற்றும் நோயெதிர்ப்பு துறையில் முதுகலை பட்டதாரியாக இருந்தபோது, ​​தனது மேற்பார்வையாளர்களால் எச்சரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் தனது கணவரும் வைரஸ் தொற்று தொடர்பான நிபுணராவர். அவரும் மாலிக்கும் இலங்கையிலிருந்து வந்தவர்கள்.

குறித்த இருவருக்கும் வைரஸ் தொற்று தொடர்பில் நிறைய விடயங்கள் தெரியும் என வைத்தியர் லி மெங் கூறியுள்ளார்.

மேலும் பேராசிரியர் பீரிஸுக்கு உலக சுகாதார அமைப்பினை சேர்ந்தவர்களுடனும் நல்ல பழக்கம் உள்ளதென எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சீன விஞ்ஞானிகள்,சீனா மற்றும் WHO வைரஸ் பற்றி கம்பளத்தின் கீழ் அனைத்தையும் மறைத்ததாகவும் வுஹான் ஹுனான் கடல் உணவு சந்தை மற்றும் காட்டு விலங்குகள் தான் SARS-CoV-2 இன் ஆரம்பம் என்று சி.சி.பி வலியுறுத்துகிறது என வைத்தியர் லி மெங் கூறியுள்ளார்.

ஆனால் அந்த சந்தையை ஆராய்ந்து மாதிரிகளைச் சேகரிக்க விஞ்ஞானிகளை சி.சி.பி அனுமதிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சீன அரசாங்கம் இந்த விடயங்களை வெளியிட விரும்பவில்லை, எனவே, சிவப்பு கோட்டை கடக்க வேண்டாம் என்றும் மீறினால் ‘காணாமல் போவாய்’ என்றும் எச்சரிக்கப்பட்டதாக வைத்தியர் லி மெங் ட்வீட் செய்திருந்தாக ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ கேணல் குறிப்பிட்டுள்ளார்

மேலும் வைத்தியர் மாலிக் பீரிஸ்,ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அமெரிக்காவை சேர்ந்தவர்கள்,சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த அழுக்கு வியாபாரத்தில் உதவி செய்வதாகவும் தோன்றுகிறது என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஆகவே இந்த இரண்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வகத்தில் என்ன செய்கிறார்கள் மற்றும் அவர்கள் கொரோனா-19 பேரழிவின் ஒரு பகுதியாக இருக்கிறார்களா என்பதை சீனா உலகிற்கு சொல்ல வேண்டிய நேரம் இது எனவும் அவர் கூறியுள்ளார்.