கிணற்றில் குதித்து தற்கொலை செய்த கர்ப்பவதி பெண்ணுக்கும், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதி..
கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பெண்ணுக்கும், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
குறித்த இரு சம்பவங்களும் வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அதன் விபரம் வருமாறு, வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் நேற்றய தினம் கிணற்றில் குதித்து
கர்ப்பவதி பெண் ஒருவர் தற்கொலை செய்திருந்தார். இந்நிலையில் அவருடைய சடலத்தின் மீது நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் வவுனியா - குருமன்காடு பகுதியை சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.