விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது எவ்வாறு? -முதல் முறையாக மனந்திறந்த நயன்தாரா-
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நயன்தாரா முதன்முறையாக தனக்கு காதல் மலர்ந்தது குறித்தும் விக்னேஷ் சிவன் பற்றியும் பேசியுள்ளார். தனது கையில் இருப்பது நிச்சயதார்த்த மோதிரம் தான் என்று தெரிவித்துள்ள அவர், விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தது எப்படி என்பது பற்றி தெரிவித்துள்ளார்.
காதலில் விழுவதற்கு, நாம் யாரை விரும்புகிறோம் என்பது முக்கியம் என நினைக்கிறேன். அதோடு அவர் நம்மை எப்படி கவனித்துக்கொள்கிறார், அவருடன் இருக்கும்போது எவ்வாறு உணர்கிறோம் என்பதுதான் முக்கியம்.
அவரிடம் எனக்கு எல்லாம் பிடித்திருக்கிறது. இதுதான் பிடிக்கும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. அவரைப் பற்றி நான் அதிகம் பேசியதில்லை. இதுவரை நான் பார்த்தவர்கள், நம் முன்னேற்றத்தைத் தடுக்க முயல்பவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.
அவர் அப்படியானவர் அல்ல. அவர் என் வாழ்க்கையில் வந்தபின்தான் நான் அதிகம் பணிபுரிய ஆரம்பித்திருக்கிறேன். என் வேலையைச் சிறப்பாகச் செய்கிறேன் என அவர் உணர வைக்கிறார். அன்பை உணரச் செய்கிறார் என்றார்.