தீ மிதிப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
தீ மிதிப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கோவில் தீ மிதிப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த சுமார் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

மட்டக்களப்பு - வாகரை ஊரியன்கட்டு பேச்சி அம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சப வழிபாட்டில் கலந்து கொண்டிருந்ருந்தவர்களுகே தொற்று உறுதியானது. 

கடந்த சனிக்கிழமையன்று மேற்படி ஆலயத்தில் இறுதி உற்சவமான தீ மிதிப்பு நிகழ்வு இடம்பெற்று விழாக்கள் அனைத்தும் முடிவுற்றுள்ளது. 

இவர்களில் சிலர் வழமைக்கு மாறான நிலையில் நோய் வாய்ப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில்

3 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து சனி ஞாயிறுகிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையின்போது 

56 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வாகரை பிரதேசத்தில் முதற் தடவையாக அதிகளவு எண்ணிக்கையானோர் 

கொரோனா நோய் தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு