SuperTopAds

கிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி விபத்து – ஓய்வுநிலை ஆசிரியர் படுகாயம்!

ஆசிரியர் - Admin
கிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி விபத்து – ஓய்வுநிலை ஆசிரியர் படுகாயம்!

கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர்பகுதியில் இராணுவ வாகனம் மோதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரணைமடு குளத்திசையிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, மற்றுமொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட இராணுவத்தினரின் வான் ரக வாகனம் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 65 வயதான ஓய்வு நிலை ஆசிரியரான மயில்வாகனம் என்பவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.