SuperTopAds

பண மழையில் நனையும் ஒலிம்பிக் தங்க பதக்க நாயகண் நீரஜ் சோப்ரா!!

ஆசிரியர் - Editor II
பண மழையில் நனையும் ஒலிம்பிக் தங்க பதக்க நாயகண் நீரஜ் சோப்ரா!!

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை பெற்று சாதனை படைத்து உள்ளது. குறிப்பாக இப் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். 

ஈட்டி எறியும் வீரரான அவர் 86.65 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார். 121 ஆண்டு கால இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று பெருமையை அவர் பெற்றார்.

தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த அவருக்கு நாள்தோறும் பாராட்டுகளும், பரிசுகளும் குவிகின்றன. குறிப்பாக அவரது சொந்த மாநிலமான அரியானா அரசு 6 கோடி ரூபா பரிசுத்தொகையை அறிவித்தது. 

பஞ்சாப் அரசு 2 கோடியும், மணிப்பூர் அரசு ஒரு கோடியும் அறிவித்தன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு கோடியும், சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு கோடியும், எலன் குழுமம் 25 இலட்சமும் அவருக்கு பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளன. 

மேலும் மகேந்திரா குழுமம் சொகுசு காரை பரிசாக வழங்குவதாக அறிவித்தது. இன்டிகோ நிறுவனம் நீரஜ் சோப்ராவுக்கு ஓராண்டுக்கான இலவச பயணத்தை அறிவித்தது.

இதுமட்டுமல்லாமல் அவருக்கு பைஜூஸ் நிறுவனம் 2 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இதற்கிடையே நாடுதிரும்பும் நீரஜ் சோப்ராவுக்கு மிகவும் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க இந்திய ஒலிம்பிக் சங்கமும், இந்திய தடளக சம்மேளனமும் முடிவு செய்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.