சுகாதார நடைமுறைகளை மீறி தீர்த்த திருவிழா! கோவில் முடக்கப்பட்டது, பிணையில் விடுதலையான பூசகர், அறங்காவலர் சபையினர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I
சுகாதார நடைமுறைகளை மீறி தீர்த்த திருவிழா! கோவில் முடக்கப்பட்டது, பிணையில் விடுதலையான பூசகர், அறங்காவலர் சபையினர் தனிமைப்படுத்தலில்..

மட்டக்களப்பு - அமிர்தகழி மாமாங்க பிள்ளையார் கோவிலின் தீர்த்த திருவிழாவில் சுகாதார நடைமுறைகளை மீறி பல நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கூடியமை தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, 

தனிமைப்படுத்தப்படுத்தல் சட்டத்தின் கீழ் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸாரினால் கோவில் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்ட நிலையில் 

கோவில் பூசகர் மற்றும் அறங்காவலர்கள் தலா ரூ .25,000 ரொக்க பிணையில் விடுவிக்கப்பட்டனர். இன்று முதல் கோவில் வளாகத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

அவர்கள் அனைவரும் பிசிஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதேவேளை தீர்த்த தீருவிழாவில் கலந்து கொண்டிருந்த சுமார் 500ற்கும் மேற்பட்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த

சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு