அச்சுவேலி கைத்தொழில் பேட்டை கழிவுநீர் தொட்டி உடைப்பு..! மக்களின் எதிர்ப்பால் மீள அடைப்பு..
யாழ்.அச்சுவேலி மேற்கில் அமைந்துள்ளது கைத்தொழில் பேட்டையின் கழிவுநீர் தொட்டி நேற்றைய தினம் புதன்கிழமை மாலை உடைக்கப்பட்டதால் அப்பகுதி மக்களின் எதிர்ப்பை அடுத்து தற்காலிகமாக அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள உள்ளூர் தொழில் முயற்சியாளர்களில்தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட கைத்தொழில் பேட்டையிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.கைத்தொழில் பேட்டையில் இருந்து வெளியேற்றப்படும்
கடதாசி உற்பத்திக் கழிவுகள் எண்ணெய் க் கழிவுகள் மற்றும் இயந்திர சாதனங்கள் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் என்பன கழிவுத் தொட்டி ஒன்றில் சேகரிக்கப்படுகிறது.குழைத்த தொட்டி நிரம்பி அதில் நேற்றைய தினம் கனரக இயந்திரத்தை கொண்டு
குறித்த தொட்டியை உடைத்து கழிவு நீரை வெளியேற்றிம் செயற்பாடுகள் இடம்பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தொட்டி உடைக்கப்பட்டு கழிவு நீர் வெளியேறுவதை அயலில் உள்ள விவசாயக் காணிகளில் இருந்தவர்கள் அவதானித்த நிலையில்
கிராமசேவையாளர் வரவழைத்து குறித்த தொட்டியில் உடைக்கப்பட்ட பகுதியை தற்காலிகமாக அடைத்தாகத் தெரிவித்தனர். சுமார் 400 மீட்டர் நீளமான கழிவுநீர் தொட்டியில் இரசாயன கழிவுகள் காணப்படுகின்ற நிலையில் "பக்கோ" இயந்திரம் மூலம்
தொட்டியின் ஒரு பகுதியை உடைத்தே வெளியேற்றியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எதேச்சையாக தாம் விவசாயக் காணிகள் வேலை செய்து கொண்டிருந்த படியால் தொட்டி உடைந்து நீர் வழிய வருவதை அவதானித்ததாகவும்
இல்லாவிட்டால் தொட்டியில் உள்ள இரசாயன கழிவு நீர் முழுமையாக வெளியேறி விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கும்.சம்பவம் தொடர்பில் குறித்த பகுதிக்கு பொறுப்பான கிராமசவையாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது
குறித்த தொட்டி உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வருவதாக தனக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்று மண் மூடைகள் மூலம் கழிவு நீர் வருவதை கட்டுப்படுத்த தெரிவித்தார்.
குறித்த தொழிற்சாலைக்கு பொறுப்பாக இருக்கின்ற பொறியியலாளர் தொடர்பு கொண்டு கேட்ட போது குறித்த தொட்டியில் கழிவுகள் சேகரிக்கப்படுவதாகவும் இயந்திரம் மூலம் பார்வையிட்ட போது தவறுதலாக உடைபட்ட நிலையில் அதனை சரி செய்து விட்டதாக தெரிவித்தார்.