யாழ்.மாவட்டம் அபாய கட்டத்தில் தொற்றாளர் எண்ணிக்கை, மரணங்களின் எண்ணிக்கை உயர்வு! மாவட்ட செயலர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டம் அபாய கட்டத்தில் தொற்றாளர் எண்ணிக்கை, மரணங்களின் எண்ணிக்கை உயர்வு! மாவட்ட செயலர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதாக கூறியிருக்கும் யாழ்.மாவட்ட செயலர் தொற்றாளர் எண்ணிக்கை மற்றும் கொரோனா தொற்றினால் மரணிப்போர் எண்ணிக்கை  உயர்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

சமகால நிலவரம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், மாவட்டத்தில் கொரோனா நிலைமையானது 

சற்று தீவிரம் பெற்று காணப்படுகின்றது. நேற்றைய பரிசோதனையின்போது 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.137 கொரோனா இறப்புகள் இன்றுவரை யாழ்.மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. 

அந்தவகையில் 2,445 குடும்பங்களைச் சேர்ந்த 6969 பேர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். வேலணை, பருத்தித்துறை பிரதேசத்தில் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

இந்த நிலைமையில் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும்.தற்போது ஆலய வழிபாடுகள் ஊடாக மக்கள் ஒன்று சேர்வது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மதித்து 

தங்களுடைய குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எனவும் மாவட்ட செயலர் கூறியுள்ளார்.

Radio