இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்த பிரபலத்தின் மகன்

ஆசிரியர் - Admin
இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்த பிரபலத்தின் மகன்

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவின் சாக்லெட் பாய். தற்போதும் பெண்களுக்கு மாதவன் மீதான ஈர்ப்பு குறையவில்லை. இவரது மகன் தற்போது இந்தியாவிற்காக பதக்கம் பெற்றுள்ளார்.

நடிகர் மாதவன், சரிதா தம்பதியினர் மகன் வேதாந்த். இவர் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளார். இந்த தகவலை மாதவன் பெருமிதத்துடன் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

வேதாந்துக்கு நீச்சல் போட்டியில் அதிக ஆர்வம் உண்டு. இவர் தாய்லாந்தில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் வேதாந்த் கலந்து கொண்டார்.

அங்கு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் வென்றுள்ளார். இந்த செய்தியை நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மாதவன் கூறியதாவது, வேதாந்த் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்றுள்ளான். இது சரிதாவுக்கும் எனக்கும் பெருமையான தருணம். அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.