SuperTopAds

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு! ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கும் விசேட அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு! ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கும் விசேட அறிவிப்பு..

பாடசாலைகளை முடிந்தளவு வேகமாக திறக்கவேண்டும். என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியிருக்கின்றார். 

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போதைய சூழ்நிலையில் வசதியற்ற குடும்பங்களில் 

உள்ள மாணவர்கள் கல்வி வாய்ப்புகளை இழந்துள்ளதாக கூறினார். நாட்டின் தொலைதூர பகுதிகளில், 

குறிப்பாக இணைய அணுகல் இல்லாத பகுதிகளில் வாழும் மாணவர்களுக்கு இது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது 

என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறினார். தற்போது மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அவர்கள் தயாராக இருப்பதை 

நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த சூழ்நிலையில், சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, 

விரைவில் பாடசாலைகளைத் திறப்பதே முதன்மை குறிக்கோள் என்றும் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறினார்.

அனைத்து அரச ஊழியர்களும் வழக்கம் போல் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனவே இந்த சூழலில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பாடசாலைகளுக்குச் சென்று 

திறப்பதற்குத் தேவையான முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி வழங்கியதன் பின்னர் பாடசாலைகளை

மீள திறப்பது குறித்தும் ஆர்வம் காட்டுகிறோம். அதற்கமைய இம்மாத இறுதியில் 2வது டோஸ் தடுப்பூசி

வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.