திருமண நிகழ்வுகளால் நாடு பேராபத்தை சந்திக்கும்! சுகாதார நடைமுறைகள் சிலர் மதிப்பதேயில்லை, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை..
திருமண நிகழ்வுகளால் நாடு பாரிய ஆபத்தை சந்திக்கவுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளதுடன்,
திருமண நிகழ்வுகளுக்கான சுகாதார வழிகாட்டல்களை சில தனிநபர்கள் தவறாகப் பயன்படுத்துவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
தற்போதைய வழிகாட்டகளுக்கு அமைய 150 நபர்கள் வரை திருமண நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
திருமண கொரோனா கொத்தணிகள் தொடர்பில் அதிக எண்ணிக்கையிலான நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால்,
எதிர்காலத்தில் இவ்விடயம் தொடர்பில் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பெற்றவர்கள், பிசிஆர் சோதனைகள் மற்றும் என்டிஜென் சோதனைகளுக்கு உட்பட்டவர்கள் மாத்திரமே திருமணங்களில் பங்கேற்பது நல்லது
என திருமணத்திற்கு வருபவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட இடங்களை நடத்துபவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
அங்கு சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.