SuperTopAds

பொதுச்சுகாதார பரிசோதகர்களால் நிறுத்தப்பட்ட பூப்புனித நீராட்டு விழா! வீடுகளுக்கு அனுப்பபட்ட உணவு, சமையல்காரர் உட்பட 85 பேருக்கு கொரோனா..

ஆசிரியர் - Editor I
பொதுச்சுகாதார பரிசோதகர்களால் நிறுத்தப்பட்ட பூப்புனித நீராட்டு விழா! வீடுகளுக்கு அனுப்பபட்ட உணவு, சமையல்காரர் உட்பட 85 பேருக்கு கொரோனா..

பூப்புனித நீராட்டு விழாவில் உணவு சமைத்த சமையல் காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சுமார் 85 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவுத் தகவல்கள் தொிவிக்கின்றன. 

குறித்த சம்பவம் பேருவளையில் பூப்புனித நீராட்டு விழா கொத்தணி அபாயம் உருவாகியுள்ளது.பேருவளையில் பூப்புனித நீராட்டு விழாவில் சமையல்காரர் ஊடாகப் பலருக்குக் கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அனுமதியின்றி விழாக்களை நடத்துபவர்களுக்கு எதிராக 

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற மேற்படி பூப்புனித நீராட்டு விழா, பேருவளை சுகாதார அதிகாரிகளினால் நிறுத்தப்பட்டதையடுத்து, 

விழாவுக்காகச் சமைக்கப்பட்ட உணவுகள் விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த ஜூலை 26 ஆம் திகதி விழாவுக்காக உணவு சமைத்த சமையல்காரருக்குக் கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. 

இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இதுவரை 85 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.