நாட்டில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் நெருக்கடி! பி.பி.சி சிங்கள சேவை வெளியிட்டுள்ள ஆய்வில் அதிர்ச்சி..
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிலர் நோயை அடையாளம் காண்பதற்கு முன்னரே உயிரிழக்கின்றனர். எங்களிடம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே ஒக்சிசன காணப்படுகின்றது. போதியளவு கட்டில்கள் இல்லாததால் நோயாளர்களை தரையில் பாயில் படுக்கவைக்கின்றோம்.
என அரசாங்கமருத்துவமனையில் கொவிட்நோயாளர்களிற்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர் ஒருவர் பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரம் திருப்தியளிக்கும் விதத்தில் இல்லை என மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தள்ளது.
இமேல்மாகாணத்தில் நோய் அறிகுறிகளுடன் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இநோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் மீண்டும் அதிகரிக்கின்றது. எங்களால் இதனை கட்டுப்படுத்த முடியாவிட்டால் நாங்கள் மாத்திரமல்ல உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகள் கூட போக்குவரத்து கட்டுப்பாடுகள் போன்றவற்றை அறிவிக்கவேண்டிய நிலையேற்படும்.
நாங்கள் இதனை மனதில் வைத்திருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிப்பதற்கு காரணம் டெல்டா கொரோனா வைரசே என்பது உறுதிப்படுத்தப்படாத போதிலும் ஜெயவாத்தனபுர பல்கலைகழகம் மேற்கொண்ட ஆய்வு டெல்டா கொரோனா வைரஸ் இலங்கையின் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதையும்
கொழும்பில் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்களில் 20 முதல் 30 வீதமானவர்கள் டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. தற்போது 224 மருத்துவமனைகளில் 32831 கட்டில்கள் கொரோனா நோயாளிகளிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் தீவிர கிசிச்சை பிரிவில் 77 கட்டில்களில் 26500 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை நாங்கள் ஒக்சிசன்களை சிறப்பாக கையாண்டுள்ளோம் ஆனால் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.பொதுசுகாதார பரிசோதகர்களும் ஆபத்தான நிலை காணப்படுவதை உறுதி செய்துள்ளனர். முன்னைய இரண்டு அலைகளை விட நாங்கள் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளோம்.
இந்த நோயாளிகள் பிசிஆர் சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்படவில்லை மாறாக ஆன்டிஜென் சோதனைகள் மூலமே அவர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண பிபிசிக்கு தெரிவித்தார். முன்னைய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டால் 4000 பிளஸ் என்ற நிலை உருவாகலாம் என தெரிவித்துள்ள அவர் இந்த நிலைமை ஆபத்தானது.
இது ஆபத்தான நிலைமையின் ஆரம்பம் எனவும் தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 50தை தாண்டியுள்ளது எனஅரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரசாத்கொலம்பகே தெரிவித்துள்ளார். இந்த நிலைமை தொடர்ந்தால் ஒரு மாதத்திற்குள் உயிரிழப்பு பல மடங்காக ( 4000 முதல் 4500) அதிகரிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் ஒக்சிசனை நம்பியிருப்பவர்கள் ஆகவே இது டெல்டாவாகயிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் காணப்படும் படுக்கை வசதிகளை விட நோயாளிகள் எண்ணிக்கை அதிகம் என கொலம்பகே தெரிவித்துள்ளார். தற்போது மருத்துவமனைகளில் கட்டில்கள் நிரம்பிவிட்டன
என குறிப்பிட்டுள்ள அவர் நோயாளர்களின் எண்ணிக்கை கட்டில்களின் எண்ணிக்கையை விட விரைவில் அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். சிறுவர் மருத்துவமனைகளில் இது பெரிய பிரச்சினையாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.