SuperTopAds

இந்தக் காலத்திலும் இப்படி ஒரு இளைஞனா? பலரின் பாராட்டுக்களை பெற்று உரும்பிராய் மண்ணுக்கு பெருமை சேர்கிறார்..

ஆசிரியர் - Editor I
இந்தக் காலத்திலும் இப்படி ஒரு இளைஞனா? பலரின் பாராட்டுக்களை பெற்று உரும்பிராய் மண்ணுக்கு பெருமை சேர்கிறார்..

உரும்பிராயில் குமரன் என்டுற பொடியன் ஆர் ???பாராட்டுதலுக்கும், மற்றையோரையும் சேவைசெய்ய தூண்டுவதற்குமான பதிவு இது Kumaran Sri உரும்பிராயில் இந்துக்கல்லூரி வளாகத்திலே கடந்த இரு தினங்களாக கொரோணா தடுப்பு மருந்தேற்றல் நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.

இதிலே அரச துறைசார் உத்தியோகத்தர்கள் தத்தமது கடமைகளை கடமைக்கு மேலதிகமாக சேவை மனப்பாங்குடன் செய்து வருகின்றனர். இது இப்பிடி இருக்க கிராம அலுவலர் என்ன பொதுமக்கள் சார் தகவல் மற்றும் ஆளணி உதவி என்றாலும் குமரனை கேளுங்கோ என்டுறார். 

ஊசிக்கு வாற வயோதிபர்களை கொரணா அச்சுறுத்தல் எதுவும் பாராமல் கையைப்பிடிச்சு கூட்டிக்கொண்டுபோய் காட் எல்லாம் பதிஞ்சு உதவுறார். இது பத்தாதென்டு நேற்றிரவு 8.40 மணியளவில் நான் பணியில் இருந்த போது ஆட்டோவிலை ஸ்பீக்கர் கட்டி சனத்தை ஊசிக்கு வரச்சொல்லி அறிவிக்கின்றான்.

அதுவும் என்ன ஒரு விருப்பமாக ஊருக்கை என்ன பொது வேலையெண்டாலும் குமரன் குமரன் குமரன். அது சரி ஆள் உத்தியோகம் ஒண்டும் இல்லையோ எண்டால்… அரச உத்தியோகத்தில் இலங்கை போக்குவரத்து சபை பொறியியல் பிரிவில் கடமையாற்றுகின்றார்.

மீதி நேரத்திலை தான் இப்பணிகள் இவளவு ஏன் எந்த உதவி செய்தாலும் அற்ப சலுகைகளை எதிர்பார்க்கமாட்டான். நான் கொரணா காலத்திலை அங்கேயே தங்கி நின்று கடமையாற்றியபோது (மருதனார்மடம் கொத்தணி) எனக்கு மழையில் கூட நனைஞ்சு வந்து சாப்பாடு தந்தவர்.

நடிப்பு திறமையால் பல விழிப்புணர்வு நிகழ்வுகளை காணொளியாக வெளியிட்டுமுள்ளார். விவசாயத்தில் அதீத ஈடுபாடு என்னை மிகவும் கவர்ந்த விடயம்.நான் சும்மா புழுகேலை. இந்த 30-35 வயது குறூப் (90’S kids) பெடியளுக்க குமரன் வித்தியாசம்.

எப்பிடியும் எனது முதல் நியமனம் உரும்பிராய்.இந்த வருடத்தோட இடமாற்றம் பெற்றிடுவன். குமரனை மாதிரி சில பேரை வாழ்வில் மறக்க முடியாது. நீண்ட ஆயுள் கைகூடி இறையருளுடன் சமூக சேவைகள் பல தொடரட்டும் குமரா இது மற்றையோர்க்கும் ஓர் Motivation இற்காக எழுதியுள்ளேன்.

உரும்பிராயிலுள்ள பல நல்லுள்ளம் கொண்ட இளைஞர்களுள் இவரும் ஒருவர். எமது இணையத்தின் சார்பாகவும் இவரை பாராட்டி வாழ்த்துகின்றோம்  

உரும்பிராய்

சுகாதார உத்தியோகத்தர் : Niroopan Natkunarajah