யாழ்.கே.கே.எஸ் வீதியில் திடீரென மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு, கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கே.கே.எஸ் வீதியில் திடீரென மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு, கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது..!

யாழ்.காங்கேசன்துறை வீதியில் சிவலிங்க புளியடி சந்தியில் திடீரென மயங்கி விழுந்து நிலையில் உயிரிழந்த 63 வயதான முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

சுதுமலை மற்றும் உரும்பிராயை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடையவரே இவ்வாறு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையில் உறவினர் ஒருவரை பார்வையிட்டு நேற்று மதியம் 

1.45 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.யாழ்.நகரை அண்மித்த சிவலிங்கப் புலியடியச் சந்தியில் பயணித்த போது, அவர் திடீரென வீதியில் மோட்டார் சைக்கிளில் சரிந்து வீதியோரத்தில் வீழ்ந்துள்ளார். அவலக் குரல் எழுப்பிய அவரை அந்தப் பகுதியைச் சேர்ந்தோர் 

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.அவருக்கு உடனடியாக முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை 1.25 மணியளவில் உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.சடலம் சுகாதார விதிமுறைகளின் கீழ் யாழ்.கோம்பயன் மணல் மயானத்தில் மின்தகனம் செய்யப்படவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு