SuperTopAds

நாட்டிலுள்ள சகல அரச ஊழியர்களுக்கும் அரசு விடுத்துள்ள அறிவிப்பு! 2ம் திகதி முதல் கடமை..

ஆசிரியர் - Editor I
நாட்டிலுள்ள சகல அரச ஊழியர்களுக்கும் அரசு விடுத்துள்ள அறிவிப்பு! 2ம் திகதி முதல் கடமை..

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மிக குறைந்தளவு ஊழியர்களை கடமைக்கு அழைப்பதற்கும், வீட்டிலிருந்து கடமையாற்றுவதற்கும் அனுமதியளிக்கும் சகல சுற்று நிருபங்களும் இரத்து செய்யப்படுவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்திருக்கின்றது. 

இதன்படி எதிர்வரும் 2ம் திகதி திங்கள் கிழமை தொடக்கம் சகல அரச ஊழியர்களையும் கடமைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி செயலாளர் ஜயசுந்தர பொதுச்சேவைகள் மற்றும் மாகாணசபைகள், உள்ளுராட்சி அமைச்சுக்களுக்கு அறிவித்துள்ளார். 

நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும்  மிகப்பெரும்பான்மையானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. எனவே பொது சேவையின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதற்கமைய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு உள்பட்டு

2021 ஓகஸ்ட் 2ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழக்கம்போல அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு அழைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறிக்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வரையறுக்கப்பட்ட ஊழியர்களை கடமைக்கு அழைப்பதற்கும் வீட்டிலிருந்து கடமையாற்றுவதற்கும் அனுமதியளித்து வழங்கப்பட்ட அனைத்து சுற்றறிக்கைகளையும் இரத்து செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.