நாட்டில் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள் அமுலாகலாம், தினசரி தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு..! மக்களின் கையில் முடிவு என்கிறார் இராணுவ தளபதி..

ஆசிரியர் - Editor I
நாட்டில் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள் அமுலாகலாம், தினசரி தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு..! மக்களின் கையில் முடிவு என்கிறார் இராணுவ தளபதி..

நாட்டில் தினசரி கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மிக இறுக்கமாக பின்பற்றுமாறு கூறியிருக்கும் இராணுவ தளபதியும் தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா, 

மக்கள் தம் பொறுப்புக்களில் இருந்து தவறினால் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் நாளாந்தக் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 

ஒரு மாதத்தின் பின்னர் நேற்றுமுன்தினம் 1,900 ஐத் தாண்டியுள்ளது. இதேவேளை, நேற்று 2,300 இற்கும் மேற்பட்ட கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .இவர்கள் அனைவரும் புத்தாண்டுக் கொரோனாக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்.

சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வந்தமையால் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. எனவே, மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல் இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டி வரும்.

கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொதுமக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு