5 மொழிகளில் தயாராகும் தளபதியின் படம்

ஆசிரியர் - Editor II
5 மொழிகளில் தயாராகும் தளபதியின் படம்

தளபதி விஜய் நடிக்கும் 66 ஆவது படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். 

தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆர். நடித்த பிருந்தாவனம், பிரபாஸ் நடித்த முன்னா ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உள்ளார். 

இந்நிலையில் தளபதி விஜய்யின் 66 ஆவது படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நேரடி படமாக எடுக்க திட்டமிட்டு உள்ளனர். படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு