வட்ஸ்அப் ஊடாக லண்டனில் உள்ளவருடன் தொடர்பு! அந்தரங்க புகைப்படங்களை காண்பித்து கப்பம் பெற முயன்ற லண்டன் வாசியின் சகாக்கள் கைது..

ஆசிரியர் - Editor I
வட்ஸ்அப் ஊடாக லண்டனில் உள்ளவருடன் தொடர்பு! அந்தரங்க புகைப்படங்களை காண்பித்து கப்பம் பெற முயன்ற லண்டன் வாசியின் சகாக்கள் கைது..

பெண் ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடப்போவதாக லண்டனில் இருந்து அச்சுறுத்தி கப்பம் பெறுவதற்கு முயற்சித்த சம்பவத்தில் லண்டனில் உள்ளவருக்காக கப்பம் பெற சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொழும்பு மகளிர் மற்றும் சிறுவர் காவல்துறை பிரிவினால் நேற்றுமுன்தினம் கொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்தில் 

வசிக்கும் இருவர் 7 இலட்சம் ரூபா கப்பம்பெற முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய பெண் ஒருவர் இரு வருடங்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் ஊடாக பிரித்தானியாவை வதிவிடமாகவும் யாழ்ப்பாணத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட நபர் ஒருவருடன் தொடர்பை பேணி வந்துள்ளார். 

இதன்போது இணையத்தின் ஊடாக இருவரும் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இருவரும் தொடர்பில் இருந்தபோது 

வாட்ஸ்அப் ஊடாக பெற்றுக் கொண்ட குறித்த பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பிரித்தானியாவில் வசிக்கும் நபர் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகக் கூறி அச்சுறுத்தியுள்ளார்.

புகைப்படங்களை வெளியிடாமல் இருப்பதற்கு சந்தேகநபர் குறித்த பெண்னிடம் 17 இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளார். இதன்போது 7 இலட்சம் ரூபாவை தருவதாக பாதிக்கப்பட்ட பெண் குறித்த நபரிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மகளிர் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நேற்று குறித்த நபரால் கப்பத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு கொம்பனித் தெருவிற்கு அனுப்பப்பட்ட இருவர் 

கொழும்பு மகளிர் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் முறைப்பாடளித்த பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது அவர் சம்பவம் தொடர்பில் 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை இதுவரை நேரில் கண்டதில்லை எனவும் சமூக வலைத்தளங்களின் ஊடாக மாத்திரமே தொடர்பைப் பேணியுள்ளதாகவும் தெரிவித்துள்ளரார்.

பிரித்தானியாவில் வசிப்பதாகக் கூறப்படும் நபர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு