மேலும் 5 பிரதேச செயலக ஊழியர்களுக்கு தொற்று! பிரதேச செயலகத்தின் இரு பிரிவுகள் தவிர்ந்த மற்றய அனைத்து பிரிவுகளும் இன்று வழமைக்கு..
கண்டாவளை பிரதேச செயலகத்தில் 68 பேருடைய மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
2 நாட்கள் இயங்காது இருந்த கண்டாவளை பிரதேச செயலகத்தின் பணிகள நாளை வியாழன் முதல் வழமைக்கு திரும்புகின்றது. அதற்கு அமைவா திட்டமிடல் கிளை, சமுர்த்தி வங்கி தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள்
வழமைபோல் இடம்பெறும் எனவும், மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறும் கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் தெரிவிக்கின்றார்.