ஏப்ரல் 13 முதல் நிறுத்தப்படும் பிரபல கூகுள் சேவை

ஆசிரியர் - Admin
ஏப்ரல் 13 முதல் நிறுத்தப்படும் பிரபல கூகுள் சேவை

கூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷோர்ட்னர் (URL shortener) சேவையை ஏப்ரல் 13ஆம் திகதி முதல் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் கூகுள் சேவையை பயன்படுத்துவோர் பிட்லி (Bitly) அல்லது Ow.ly போன்ற சேவைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் யுஆர்எல்களை பயனர்கள் ஐஓஎஸ், அண்ரோய்ட் அல்லது இணையத்தளங்களில் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும். ஏப்ரல் 13 ஆம் திகதி முதல் தற்சமயம் கூகுள் யுஆர்எல் ஷார்ட்னர் சேவையை பயன்படுத்துவோர் மட்டும் ஒரு வருடத்திற்கு புதிய சிறு லின்க்களை உருவாக்க முடியும் என மென்பொருள் பொறியாளரான மைக்கேல் ஹெர்மான்டோ தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே உருவாக்கப்பட்ட சிறிய லின்க்களில் தொடர்ந்து சேவையை பயன்படுத்த முடியும். அந்த வகையில் மார்ச் 30, 2019 வரை இந்த சேவைகள் சீராக இயங்கும் என வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இணையத்தில் பிரபல சேவையாக இருக்கும் கூகுள் யுஆர்எல் ஷோர்ட்னர் 2009 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு